வளர்ப்பு நாயினை வீதியில் விட்ட உரிமையாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
Ad Space
Ad Space
பருத்தித்துறை நகர்ப்புறத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வளர்ப்பு நாயினை வீதியில் விட்ட, உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த முறைப்பாடு தொடர்பாக பரிசீலணை மேற்கொண்டு குறித்த நபருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு, நேற்று வெள்ளிக்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாயின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் பின்னர் கடுமையான எச்சரிக்கையுடன் உரிமையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space