அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது
Ad Space
Ad Space
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் சனிக்கிழமை (14) தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைககிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.
இதன்போது, மடு, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய 25 வயதுடைய மனைவி, மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Ad Space
Ad Space