வவுனியா மாநகர சபை நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறைப்பாடு
Ad Space
Ad Space
வவுனியா மாநகர சபையில் நிதி முறைக்கேடுகள் மற்றும் அங்கு இடம் பெற்ற பல்வேறு துஷ்பிரயோக செயல்பாடுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணை குழுவில் எதிர்க்கட்சியால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாநகர சபையில் பல்வேறு இடங்களிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பெற்றுக் கொண்ட முறை, திருநாவற்குளம் கால்வாய் தூர்வாரப்பட்ட விடயம், மாநகர் சபைக்கு சொந்தமான காணியை முறையற்றவிதத்தில் வர்த்தக நடவடிக்கைக்கு வழங்கியமை உட்பட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இலஞ்ச ஊழல் ஆணை குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் அண்மையில் முறைப்பாட்டாளர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலங்களையும் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டிருந்ததோடு தொடர்ச்சியாக முறைப்பாட்டாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.
Ad Space
Ad Space