வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
கடுவலை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கோஷல செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவலை - கொள்ளுபிட்டி வீதியில் திங்கட்கிழமை (12) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குறித்த சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space