வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல்
Ad Space
Ad Space
ஈரான் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் இஸ்ரேலிய விமானப்படை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரானிய பயங்கரவாத ஆட்சி மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இராணுவ நோக்கங்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களை வெளியேறுமாறு IDF "அவசர எச்சரிக்கை" விடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
லெபனானின் பெய்ரூட்டின் தஹியே புறநகர்ப் பகுதியான ஹரேத் ஹ்ரீக் பகுதியில் இஸ்ரேல் புதிய தாக்குதல்கள் நடந்தியுள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்தில் தஹியே மீது குறைந்தது இரண்டு தாக்குதல்களுக்குப் பிறகு இது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தஹியேயில் உள்ள அல் ஹதத் சுற்றுப்புறத்திற்கு இஸ்ரேலிய இராணுவம் கட்டாய இடமாற்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
Ad Space
Ad Space