காலி பொலிஸ் பிரிவின் அம்பலன்வத்தை பகுதியில் வாயு துப்பாக்கி (Air Rifle) வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று புதன்கிழமை (30) பிற்பகல் வாயு துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த பெண், கரபிட்டிய  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தெனியாய பகுதியைச் சேர்ந்த  57 வயதுப் பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி,  உயிரிழந்த பெண், அம்பலங்கொட, மவுண்ட் ஹால் வத்தவில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு பெண் மற்றும் மேலும் இரண்டு பேருடன் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகல் வாயு துப்பாக்கி வெடித்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அங்கு பணிபுரிந்து வந்த மற்றொரு பெண் காலி பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.