உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை.
அதே பாடலை பாடியதற்காக கிளிநொச்சி இளைஞன் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு சார்பான வகையில் சட்டத்தை பயன்படுத்த கூடாது. சுரேஸ் சலே அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருக்காக விசேட பூஜைகள் செய்தோம்.
இதில் யாருக்கு என்ன பிரச்சினை உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்திரைத் தீர்வை(விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களை அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space