தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும் சிறைக்குள் தான் இருக்கின்றார்கள் என மு.கோமகன் தெரிவித்துள்ளார்.
அதில் இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம் மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள். எனவே அவர்கள் இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றார்.
விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகளும் சிறையிலேயே உள்ளார்கள்! - மு.கோமகன்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space