‘‘நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் ஆனி ராஜா, தேசிய அரசியல் விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் அ.மு.சலீம் மாநில அரசியல் - தேர்தல் பணி குறித்து உரையாற்றினார். தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா வேலை அறிக்கை வாசித்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலை: சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆனி ராஜா சாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space