வில்பத்து தேசிய பூங்காவில் உடும்பை வேட்டையாடியவர் கைது!
Ad Space
Ad Space
வில்பத்து தேசிய பூங்காவின் குக்குல்கடுவ பிரிவு அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வேட்டையாடப்பட்ட உடும்பு மற்றும் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 02ஆம் திகதி அம்பகஹவெவ பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதுடையவர் என்பதோடு, அவரிடமிருந்து சுமார் 04 அடி நீளமான உயிரிழந்த உடும்பு மற்றும் ஒரு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவரை எதிர்வரும் 06ஆம் திகதி நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குக்குல்கடுவ பிரிவு வனவிலங்கு உத்தியோகத்தர் கே.பி. உதய கருணாநாயக்க, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் பி.வி. சந்தருவன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
Ad Space
Ad Space