வெலிமடை - மஸ்பன்ன வீதியில் மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு
Ad Space
Ad Space
வெலிமடை-மஸ்பன்ன வீதியில் பம்பரப்பன பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை (05) இந்த மண்சரிவு ஏற்பட்டதால் வெலிமடை-மஸ்பன்ன வழித்தடத்தில் பஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தற்போது, ஊவா பரணகம பிரதேச சபை பாதிக்கப்பட்ட இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில், அம்பாறை, லஹுகலவில் அதிகபட்சமாக 173.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Ad Space
Ad Space