வெல்லவாயவில் விபத்து: போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
Ad Space
Ad Space
வெல்லவாய - எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை (21) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த நால்வரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space