வெளிநாடு ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி நபரொருவரிடம் இருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியாவை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி, நபரொருவரிடம் இருந்து 4,990,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டுக்கு அமைவாக, கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபர், இந்தியாவில் பிறந்தவர் எனவும் பின்னர் இலங்கை குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன்,.கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மேற்படி மோசடி சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி வலய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கிளிநொச்சியில் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space