அரசுத் துறைகள், பொதுத் துறை நிறு​வனங்​களில் வெளி முகமை( அவுட்சோர்சிங்) முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதனால், டிஎன்பிஎஸ்சி, தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளி முகமை  பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் முகமையாக அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் நியமிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் பல்​வேறு துறைகளுக்கு தேவைப்​டும் பணி​யாளர்​கள் தமிழ்​நாடு அரசுப்பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்சி) மூலமாகவும், அரசுப் பள்ளி ஆசி​ரியர்​கள், அரசு பாலிடெக்​னிக் விரிவுரையாளர்​கள், அரசுக் கல்​லூரி உதவி பேராசி​ரியர்​கள் ஆகியோர் ஆசி​ரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயி​லாகவும், காவல், தீயணைப்பு, சிறைத் துறை பணி​யாளர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரியம் (டிஎன்​யுஎஸ்ஆர்பி) மூலமாகவும் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர்.

இதேபோல் செவி​லியர் உள்​ளிட்ட மருத்​து​வப்பணி​யாளர்​கள், மருத்​து​வர்​கள் தமிழ்​நாடு மருத்​து​வப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக தேர்​வு செய்​யப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறு​வனங்​களுக்கு வெளி முகமை முறை​யில் (வெளி முகமை) பணி நியமனப் பணிகளை மேற்​கொள்​ளும் பொறுப்பு, அரசு பொதுத் துறை நிறு​வனமான அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்​திக் வெளி​யிட்ட அரசாணை​யில், ‘அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் அது​தொடர்​பான நிறு​வனங்​களுக்கு தேவைப்​படும் பணி​யாளர்​களை அவுட்​சோர்​சிங் முறை​யில் தேர்வு செய்​யும் முகமையாக அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனத்தை ஆளுநர் நியமித்​துள்​ளார்’ என கூறப்​பட்​டுள்​ளது.

சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் தற்​போது வெளி​நாட்டு நிறு​வனங்​களுக்கு செவி​லியர்​கள், மருத்​து​வர்​கள், பொறியாளர்​கள், டெக்​னீஷியன்​கள் போன்ற பணி​யாளர்​களைத் தேர்வு செய்​யும் பணியை மேற்​கொண்டு வரு​கிறது.

அவுட்​சோர்​சிங் முறை​யி​லான பணி​நியமனங்​கள் ஓர் அரசு நிறு​வனம் மூலமாகவே மேற்​கொள்​ளப் படும் பட்​சத்​தில், இனிமேல் டிஎன்​பிஎஸ்சி, டிஆர்பி, எம்​ஆர்பி உள்​ளிட்ட வாரியங்​கள் மூலம் நிரப்​பப்​படும் பணி​யிடங்​கள் குறையும் அபாயம் உள்​ளது.

இது​குறித்து தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றியத்​தின் மாநில தலைவர்அமிர்​தகுமார் கூறியது: தவெக ஆட்​சிக்கு வந்​தால் அவுட்​சோர்​சிங் முறை பணி நியமனம் ஒழிக்​கப்​படும் என வாக்​குறுதி அளித்​தனர். ஆனால், அந்த வாக்​குறுதியை நிறைவேற்​றாமல் அவுட்​சோர்​சிங் முறையை நடைமுறைப்​படுத்த முடிவு செய்​துள்​ளனர்.

இது​தான் மக்​கள் விரும்​பிய மாற்​றமா, இந்த புதிய நடைமுறை​யால், அலு​வலக உதவியாளர்​கள், செவி​லியர்​கள், தூய்​மைப் பணி​யாளர்​கள், இளநிலை உதவியாளர்​கள் என தற்​போது தனியார் முகமை​கள் மூலம் அரசுத் துறைகளில் மேற்​கொள்​ளப்​படும் பணி நியமனங்​கள் அனைத்​தும் இனி அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் வாயி​லாக மேற்​கொள்​ளப்​படும்.

எனவே, இளைஞர்​களுக்கு அரசுத் துறைகளில் நேரடி நியமன வாய்ப்பு குறையும். அரசைப் பொருத்​தவரை இந்த நட​வடிக்கை செல​வினத்தை குறைக்​கக்​கூடும். அதே நேரம், அரசு நிர்​வாகத்​தில் தவறுகள் அதி​கரிக்​கும்.

நிரந்​தர அரசு ஊழியர்​களுக்கு இருக்​கக்​கூடிய பொறுப்​புணர்வு, அவுட்​சோர்​சிங் ஊழியர்​களுக்கு இருக்​காது. ஏதேனும் தவறு நிகழும் பட்​சத்​தில் அவர்​களிடம் கேள்வி கேட்க முடி​யாது.

அரசுத் துறைகளில் அவுட்​சோர்​சிங் பணி நியமன முறை​யால் லட்​சக்​கணக்​கான இளைஞர்​களின் ‘அரசு வேலை’ கனவு, கனவாகவே போய்​விடும். எனவே, அவுட்​சோர்​சிங்முறையை தமிழக அரசு உடனடி​யாக கைவிட வேண்​டும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்​சம் பணி​யிடங்​களை விரைந்து நிரப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.