கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரி்க்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்.8 அன்று புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஒரு மாதம் கடந்தும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறி மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க இன்னும் எத்தனை நாளாகும் என்பது குறித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பதிலளி்க்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.15-க்கு தள்ளி வைத்தார்.