முதற்கட்டமாக வேலணைப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிறுவனத்தின் ஊடாக நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Star Gold நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாக நூடில்ஸ் (Noodles) உள்ளது. அதேவேளை, உயர்தரமான அரிசி மா, அவித்த மா மற்றும் மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
உள்ளூர் சந்தையில் மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளை, இப்பொருட்கள் சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்ததாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிநவீன இயந்திரங்களுடன் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்சாலை, எதிர்வரும் மாதம் தனது வணிக ரீதியான உற்பத்திச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.
இவ்வேலைத்திட்டமானது வேலணைப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.