வைத்தியர் பற்றாக்குறையால் கிராமப்புற வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயம்
Ad Space
Ad Space
தராதரம் பெற்ற வைத்தியர்களது பற்றாக்குறை காரணமாக கிராமப்புற வைத்திய சாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக மல்வத்து பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மகாநாயக்கத்தேரரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தா்ர. சுகாதாரத்தறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவைத்திய அதிகாரிகள் சங்கம் மகாநாயக்டகத்தேர்ர்ளை சந்தித்து விளக்கமளித்து. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டின் எல்லாத்துறைகளிலும் பிரச்சினைகள் உருவெடுத்துள்ளன. நோயளர்கள் வைத்தியர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முன் வரவேண்டும். தற்போது அரசுக்கு போதியளவு நிதி உள்ளது. அவற்றை திறைசேரியில் முடக்கி வைத்திருப்பதில் பயன் இல்லை. தேவையான விடயங்களுக்கு செலவிட வேண்டும்.
மேற்படி குழுவினர் அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கா் வண. வரகாகொட ஞானரத்ன தேரர் அவர்களையும் சந்தித்து வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
அங்கு அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தெரர் தெரிவித்த்தாவது,
இன்று வைத்தியர்களுக்கும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் பாரியவெற்றிடங்கள் காணப்படுகின்றன. குறைந்த பட்சம் நாட்டில் உள்ளவர்ளையாவது பாதுகாத்துக் கொள்ளவேண்டும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேலைத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரவித்தார்.
இச்சந்திப்பில் அரச வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space