பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நியாயமான காரணங்களுக்காக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், ஆனால் தற்போதைய போராட்டமானது தேவையற்றது என்றும் குறிப்பிட்டார். அமைச்சருடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு அவர் வைத்திய சங்கத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை (04) மதியம்; 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இக்கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும், குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது ஊதியமோ வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் அடிப்படையற்றது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space