முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.