ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு பிணை
Ad Space
Ad Space
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (05) பிணை வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, நீதிமன்றம் இவருக்கு 500,000 ரூபாய் ரொக்கப் பிணை, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் மற்றும் வெளிநாட்டு பயணத் தடை போன்ற நிபந்தனைகளுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.
அப்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், செவ்வாய்க்கிழமை (05) காலை இந்த பிணை உத்தரவை அறிவித்தார்.
Ad Space
Ad Space