ஹட்டனில் லொறி - வேன் மோதி விபத்து ; இருவர் படுகாயம்
Ad Space
Ad Space
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் சனிக்கிழமை (17) லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிவவருகையில் ஹட்டனில் இருந்து குடகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன, மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Ad Space
Ad Space