ஹந்தானை மலைப்பகுதியில் வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது 'கட்டுஸா கொண்ட' என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச் சென்றபோது வழிதவறி காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்டவரை மீட்பதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர் முன்னதாக ஹந்தானை பகுதியில் வசித்தவர் என்றும், பின்னர் கொழும்பில் குடியேறியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு யூடியூப் செயற்பாட்டாளரான இவர், மலை ஏறி அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ஹந்தானையின் மிக உயர்ந்த பகுதியான "கட்டுஸ்ஸ கொண்ட" பகுதியில் சிக்கியிருப்பதாக கண்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும், அந்த மலை உச்சியில் நிலவும் கடும் ஆபத்தான சூழல் காரணமாக அவரை மீட்பது மிகவும் கடினமான காரியமாக இருந்துள்ளது.
இதனையடுத்து, கண்டி பொலிஸார் அந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ள கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இந்த மீட்புப் பணியின்போது இராணுவத்தின் 111ஆவது காலாட்படைப் பிரிவின் 2ஆவது (சுயாதீன) சிங்க ரெஜிமண்ட் படையணியின் வீரர்கள் இணைந்து குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், கண்டி பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் எட்டுப் பேர் கொண்ட ஒரு அணியினர் (பட்டேலியன்) இந்த சவாலான மீட்புப் பணியைத் தொடங்கி வெற்றி பெற்றனர்.
கடும் இருள் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு மத்தியிலும் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக அவரை காலை வேளையில் மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர் பாதுகாப்பாக மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space