ஹல்துமுல்லையில் இராணுவம் அதிரடி : 1.5 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!
Ad Space
Ad Space
ஹல்துமுல்லை, இலுக்பெலஸ்ஸ வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு:
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று திங்கட்கிழமை (23) இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்துடன் இணைந்து ஹல்துமுல்லை பொலிஸார், பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
வனப்பகுதியில் விற்பனைக்காகத் தயாரான நிலையில் சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த 140 கிலோகிராம் கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 1.5 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஹல்துமுல்லை பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு, வனப்பகுதியில் இவ்வாறான சட்டவிரோத பயிர்ச்செய்கை மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறியும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Ad Space
Ad Space