சர்வாதிகாரி ஹிட்லர் ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திய மாளிகை ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், ஆஸ்திரியா எல்லையில், ஆல்ப்ஸ் மலையில், 6,000 அடி உயரத்தில் ஆங்கிலத்தில் கழுகின் கூடு (Eagle's Nest) என அழைக்கப்படும் ஒரு மாளிகை அமைந்துள்ளது. 

அந்த மாளிகை, நாஸி அதிகாரிகள் ஓய்வெடுப்பதற்காக 1938ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாளிகை ஆகும்.

அங்கு, சர்வாதிகாரியான ஹிட்லரும் அவ்வப்போது தங்குவதுண்டாம்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில், அந்த மாளிகையில் தீப்பற்றியுள்ளது. 

தீயணைப்பு வீரர்கள் அங்கு செல்லும்போது, அந்த மாளிகை முழுவதும் தீ பரவிவிட்டதைக் கண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த மாளிகையில் தீப்பிடித்தபோது மாளிகைக்குள் யாரும் இல்லை என்றும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்த மாளிகையில் தீப்பற்றியவுடன், சந்தேக நபர் ஒருவர் சிக்கியதாகவும், அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தீப்பற்றியது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.