ஹினிதுமவில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; பாடசாலை மாணவன் பலி, ஒருவர் காயம்
Ad Space
Ad Space
ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
தவலம - அக்குரஸ்ஸ வீதியின் தவலம சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அக்குரஸ்ஸ திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிரே வந்த காருடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மாணவனும், பின்னால் அமர்ந்து பயணித்த மற்றுமொருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான மாணவன் உயிரிழந்துள்ளார்.
காலி - தலங்கல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space