ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜூலை 31இல்!
Ad Space
Ad Space
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் இன்று (15) அறிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமை மற்றும் வேண்டுமென்றே கடமையை நிறைவேற்றத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space