ஹொரணையில் 15 வாகனங்களுக்குத் தடை
Ad Space
Ad Space
ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகனப் பரிசோதனைகளின் போது, கோளாறுகள் காணப்பட்ட 15 வாகனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சுமார் 107 வாகனங்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மற்றும் வாகனங்களில் குறைபாடுகளைக் கொண்டிருந்த 35 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space