மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 20 இலட்சம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட தீர்மானித்துள்ளதாக ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாவுதீன் புருஜெர்தி தெரிவித்துள்ளார்.
ஈரான் அரச தொலைக்காட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது ஒரு "புதிய நிர்வாக முறை" அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புருஜெர்தி, "போர் என்றால் அதற்கு ஒரு செலவு உண்டு. எனவே, இங்கிருந்து செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பது ஈரானின் அதிகாரம் மற்றும் உரிமையைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space