‘லொக்கு பெட்டி’யின் ரூ.35 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
Ad Space
Ad Space
பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவான் குமார டி சில்வாவிற்குச் சொந்தமான சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, வெலிப்பன்ன பகுதியில் அமைந்துள்ள 15 பேர்ச் காணியும், அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி வீடும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தைக் கொண்டே இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space