முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமாவான தட்சிணாமூர்த்தி, தனது 102 வயதிலும் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து நேற்று வாக்குச் செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கோவில் திருமாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(102). மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மைத்துனரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமாவுமான இவர் நேற்று அங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து வாக்களித்தார்.
பின்னர் அவர் கூறியது: என்னிடம் தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்த கேட்டுக் கொண்டனர்.
ஆனால், நான் வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து தான் வாக்களிப்பேன் எனக் கூறி அதை மறுத்துவிட்டேன். இந்தத் தேர்தலில் திமுக திராவிட மாடல் ஆட்சி, நிச்சயம் தொடரும் என்றார்.
102 வயதில் வாக்குச்சாவடி வந்து வாக்களித்த முதல்வரின் தாய்மாமா
Ad Space
Ad Space
Ad Space
Ad Space