பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட உணவுப் பாதுகாப்புச் சோதனைகளின் போது, இதுவரை 21,796 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் இருந்து சுமார் 2,300 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 2,114 உணவு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது தரமற்ற மற்றும் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,308 உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அவற்றில் 3,044 உணவுப் பொருட்கள் சுகாதாரப் பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரை 1,289 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் பாதுகாப்பான உணவுகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புப் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை இந்தச் சோதனைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space