மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவின் 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (09) ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தெவிநுவரவை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவருக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த தகராறின் விளைவாகவே இந்த கொலை நிகழ்ந்துள்ளதமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கந்தர பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.