இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா ஆகியோருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செய்தியாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இதழியல், இலக்கியம், உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நேற்று முன்தினம் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக, ‘‘டிராப்டு’’ என்ற பெயரில் முன்னணி ஊடகத்தில் விழிப்புணர்வு கார்ட்டூன் தொடர் வெளியானது. இந்த படைப்புக்காக ஆனந்த் ஆர்கே, சுபர்ணா சர்மா மற்றும் ஜப்பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த ஆனந்த் ஆர்கே, இந்திய கடற்படை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்காக புதுமையான கலை படைப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த செய்தியாளர் சுபர்ணா சர்மா, அல் ஜெசீரா, பிபிசி, இந்து குழுமத்தின் பிரன்ட்லைன் இதழ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜப்பானை சேர்ந்த நடாலி ஒபிகோ பியர்சன் பிரதமர் மோடியின் அரசியல் வளர்ச்சி குறித்துஅவர் எழுதிய செய்திகள், கட்டுரைகள் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன.
2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space