2.5 மில்லியன் டொலர் மோசடி குறித்த அறிக்கை : விவாதம் நடத்தப்படவேண்டும்
Ad Space
Ad Space
திறைசேரியால் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது ஹர்ஷ டி சில்வா மேற்குறிப்பிட்ட நிதி மோசடி தொடர்பான அறிக்கையை சபையில் சமர்ப்பித்தார்.
அதனையடுத்தே, அந்த அறிக்கை பற்றிய விவாதமொன்று நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
Ad Space
Ad Space