2025 உயர்தர மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது
Ad Space
Ad Space
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் மறுமதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களது பெறுபேறுகளை மேற்கண்ட இணையத்தளங்களில் நேரடியாகச் சென்று சரிபார்த்துக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Ad Space
Ad Space