அவுஸ்திரேலிய நிறுவனமொன்றிற்கு செலுத்த வேண்டிய 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கடன் தொகை, வெளிநபர்களின் கைகளுக்குச் சென்ற சம்பவம் தொடர்பான திறைசேரியின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழு திங்கட்கிழமை (08) கூடவுள்ளது.
திறைசேரியின் குறித்த அறிக்கை, ஏற்கனவே நிதிக்குழுவின் தலைவருக்கு மாத்திரம் பார்ப்பதற்காக திறைசேரி, ஹர்ஷடி சில்வாவின் வீட்டுக்கு அனுப்பி இருந்த நிலையில், அதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, திருப்பி அனுப்பி இருந்தார். இந்நிலையில் அதன் அதிகாரிகளினால் குறி்த்த அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அறிக்கையின் பிரதிகள் குழுவின் அனைத்து அங்கத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த பண மோசடி சம்பந்தமாக அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவினால், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட பிரதானிகள் அழைக்கப்பட்டு இதற்கு முன்னரும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இது தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
25 இலட்சம் அமெரிக்க டொலர் கடன் மாற்றம் குறித்து ஆராய்வதற்காக கூடுகிறது !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space