26 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் இருவர் கைது!
Ad Space
Ad Space
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கிரீன் சேனல் வழியாக சட்டவிரோதமான முறையில் பொருட்களைக் கடத்த முயன்ற இருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஏலக்காய், வாசனைத் திரவியங்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை (25) காலை டுபாய் மற்றும் இந்தியாவின் பெங்களூரு நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு வெவ்வேறு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தமது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை, இறக்குமதி பத்திரம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் உரிய அனுமதியின்றி இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space