சுமார் 3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற 13 வெளிநாட்டு பயணிகள் இன்று (18) வியாழக்கிழமை அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் சீன நாட்டு வணிகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றைய தினம் அதிகாலை 4.00 மணியளவில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து மலேசிய ஏர்லைன்ஸ{க்குச் சொந்தமான ஆர்-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், புசநநn ஊhயnநெட ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட 212,600 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 1,063 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகள் மற்றும் தேயிலை அடங்கிய பெட்டிகளுக்குள் இந்த சிகரெட்டுகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சீன வணிகர்கள் 13 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தமது பொறுப்பில் வைத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டவர்கள் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space