37 ஆண்டுகளுக்குப் பின்னர் நைஜீரிய ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவது இதுவே முதல் முறையாகும்.
கடைசியாக 1989-ல் நைஜீரியாவின் அப்போதைய இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் இப்ராஹிம் பாபங்கிடா, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்திக்க வந்ததே நைஜீரியாவின் கடைசி உத்தியோகபூர்வ பயணமாகும்.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு சுமார் 11 பில்லியன் டொலர்களகும் ஆகும். இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டு இரு நாடுகளும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்த புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (ETIP) ஒன்றில் கையெழுத்திட்டன.
மன்னர் சார்ள்ஸ் நைஜீரியாவுடன் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டுள்ளார். அவர் இளவரசராக இருந்தபோது நான்கு முறை நைஜீரியாவுக்கு சென்றுள்ளார்.
இந்த வருகை "இலவான அதிகாரப் இராஜதந்திரத்தின்" ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் அரச ஊர்வலங்கள் மற்றும் அரசு விருந்துகள் நடைபெறவுள்ளது.
நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் பிரித்தானியாவின் மிக முக்கியமான பொருளாதாரப் பங்காளர்களில் ஒன்றாகத் திகழ்வதால், இந்த வருகை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.