‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
நேற்று (ஜூன் 10) உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த மாவட்டமான தேனிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்பு கொடைக்கானல் பிரிவு சாலை (காட் ரோடு) அருகே உள்ள அவரது பண்ணை வீட்டின் முகப்பில் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்று இரணடு வழிகள் ஏற்படுத்தப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் அவரதுஉடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கும்பல் கும்பலாக திரண்டு வந்தனர்.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space