வெனிசுலாவில் கச்சா எண்ணெய் எடுப்பது குறித்து அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:
மக்களுக்கு என்னைப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் மிகப் பெரிய அளவில் நடைபெறவிருந்த 8 போரை நிறுத்தினேன். இவற்றில் சில 36 ஆண்டுகள், 32 ஆண்டுகள் நடைபெற்றவை. இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அமெரிக்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகள் இடையே நடைபெற இருந்த போரை நிறுத்தி லட்சக்கணக்கானோரை காப்பாற்றியதாக என்னை பாராட்டினார்.
8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு இல்லையா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space