1945-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சாசனம்  நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில்,   இன்று சனிக்கிழமை (24)  அன்று ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேண 1945-இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது.

"ஐக்கிய நாடுகள்" என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலான கையொப்பமிட்ட நாடுகளால் இந்த நிறுவன ஆவணம் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக  உருவானது.

ஐக்கிய நாடுகள் சபையைப் போன்ற சட்டபூர்வத் தன்மை, அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் மற்றும் நெறிமுறைத் தாக்கம் கொண்ட வேறு எந்த உலகளாவிய அமைப்பும் இல்லை. வேறு எந்த உலகளாவிய அமைப்பும் ஒரு சிறந்த உலகத்திற்கான நம்பிக்கையை இவ்வளவு மக்களுக்கு வழங்குவதில்லை.

மேலும் நாம் விரும்பும் எதிர்காலத்தை வழங்க முடிவதில்லை. இன்றைக்கு, ஐக்கிய நாடுகளின் வாக்குறுதியை நிறைவேற்றவும், அனைத்து நாடுகளும் ஒன்றிணையவும் உள்ள அவசியம் முன்பை விட இப்போது மிகவும் அதிகமாக உள்ளது.

உலக அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த ஆண்டு (2026) ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டு 81 ஆண்டுகள் நிறைவடைகின்ற சிறப்பிக்கத்தக்கதொரு மைல்கல்லாகும்.