தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இது தொடர்பில், சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு நல்லூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தருமாறு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.

போராட்டத்தில் மக்களுடன் வேலன்சுவாமிகள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்துகொண்டுன்னளர்.