QR எரிபொருள் ஒதுக்கீடு போதாது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Ad Space
Ad Space
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள அறிக்கையில், QR முறையின் கீழ் வழங்கப்பட உள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளிலிருந்து தூரப் பகுதிகளில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கே சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையால் சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்து, அதற்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் GMOA கோரிக்கை விடுத்துள்ளது.
Ad Space
Ad Space