QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது
Ad Space
Ad Space
எரிபொருள் QR அமைப்பில் நிலவிய தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு 5.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் 95% தொழில்நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, பயனர்களுக்குத் தடையற்ற அணுகல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கிடையிலான நிலவரப்படி, இதற்கு முன்னர் பதிவு செய்யப்படாத 439,997 வாகனங்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 5,094,566 பயனர்கள் இந்த கியூஆர் குறியீட்டு அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும், இவை எரிபொருள் பயன்பாட்டில் ஒரு சீரான அதிகரிப்பை பிரதிபலிக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space