அண்டை நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் என்று ஈரானின் உச்சத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அயத்துல்லா மோஜ்தபா காமேனி அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவரான அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) அண்மையில் தேர்வானார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயத்துல்லா மோஜ்தபா காமேனி காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஈரான்-அமெரிக்க, இஸ்ரேல் போரின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மோஜ்தபா காமேனி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அண்டை அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும்: ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா காமேனி அறிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space