அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனை, ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது முதல் ஈரானின் ஷாஹெட் ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் போரில் பயன்படுத்தி வருகிறது.
ஒரே நேரத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தின. இதனால் உக்ரைனில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க மிகக் குறைந்த விலையில் நாங்களே ட்ரோன்களை தயாரித்தோம். இதன்மூலம் ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து வருகிறோம்.
தற்போது மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து உள்ளது. அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதில் உக்ரைன் ராணுவம் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. எனவே ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவத்தின் உதவியை அமெரிக்கா நாடியிருக்கிறது.
அமெரிக்காவுடன் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க உக்ரைன் திட்டம்: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space