இலங்கை நேரப்படி, இன்றைய தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்றாலும், செனட் சபைக்கான தேர்தல் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதால் இது 'இடைக்கால தேர்தல்' என அழைக்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (Senorate) மற்றும் பிரதிநிதிகள் சபை (House of Representatives) என இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
செனட் சபையில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன (ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 உறுப்பினர்கள்). பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளன. இந்த பிரதிநிதிகள், மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் எனவும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்காகவே இந்த இடைக்கால தேர்தல் நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும், மேலும் 36 மாகாண ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
செனட் சபையில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்த கட்சியே நாட்டின் சட்டங்களை இயற்றுவதிலும், அரசுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மற்றும் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய அதிகாரம் பெறவல்லதாகிறது.