பூமியிலிருந்து சுமார் 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கரினா நெபுலாவில் (Carina Nebula) பூனைத் தலை வடிவைக் கொண்ட புதிய நட்சத்திர உருவாக்கப் பகுதியை நாசாவின் ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகள் படம் பிடித்துள்ளன.

வலதுபுறம் தலை திருப்பி அமர்ந்திருக்கும் பூனையின் உருவத்தைப் போல் இருப்பதால் இதற்கு 'கெட்ஸ் ஹெட் நெபுலா' (Cat's Head Nebula) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள ராட்சச நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்கள் மற்றும் சக்திவாய்ந்த காற்றினால் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசிகள் விலக்கப்பட்டு, அடர்த்தியான பகுதிகள் மட்டும் நின்று இந்த விசித்திர உருவத்தை உருவாக்கியுள்ளன.

இந்த நெபுலாவின் மையப்பகுதியில் ஈட்டா கரினே என்ற பிரம்மாண்ட இரட்டை நட்சத்திர அமைப்பு உள்ளது. இது நமது சூரியனை விட 100 மடங்கு அதிக நிறையும், 50 இலட்சம் மடங்கு அதிக பிரகாசமும் கொண்டுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் ஒரு சூப்பர்நோவாவாக (விண்மீன் வெடிப்பு) மாறக்கூடிய நிலையில் மிகத் தீவிரமாக உந்தப்பட்டு வருகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் நட்சத்திரக் கதிர்வீச்சுகள் சுற்றியுள்ள சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் புகைப்படங்கள் வானியலாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.