யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்  தனியார் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் "அரச மதமும் தனியார் காணியும்" எனும் பொருளில் வெள்ளிக்கிழமை (27.02.2026) பிற்பகல்-02 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி.ம.திருவரங்கன், சட்டத்தரணி கலாநிதி.கு.குருபரன், வலிகாமம் வடக்குப் பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த காணி உரிமையாளர்களில் ஒருவரான திருமதி.சா.சுகுமாரி ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்துரைகளை நிகழ்த்துவர்.